BREAKING NEWS

Oct 1, 2013

ஸ்ருதியின் அடுத்த நாயகன் ஆர்யா?


ஸ்ருதியின் அடுத்த நாயகன் ஆர்யா?


பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆர்யாவும் ஸ்ருதியும் முதல் முறையாக இணையப் போகிறார்களாம். 

நடிப்பில் பெரிதாக ஸ்கோர் பண்ணாவிட்டாலும் கமல் மகள் ஸ்ருதிக்கு வாய்ப்புகளும் சம்பளமும் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு குவிகின்றன. 3 படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களைத் தவிர்த்துவிட்டு, தெலுங்கு, இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, அடுத்து ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இந்தப் படத்தில் அவர் ஜோடி ஆர்யா. இந்தப் படத்தை தடையறத் தாக்க மகிழ் திருமேனி இயக்குகிறார்.

ஆர்யாவை வைத்து படம் பண்ணப் போவதாக சமீபத்தில் தனது பிஆர்ஓ மூலம் தகவல் வெளியிட்டிருந்தார் மகிழ் திருமேனி. 

அந்தப் படம்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஆர்யா நடிக்கும் படங்களின் பெரும்பாலான ஹீரோயின்களுடன் அவரை சேர்த்துப் பேசுவது வழக்கம். 

இந்த விஷயத்தில் ஸ்ருதிஹாஸனும் ஆர்யாவுக்கு சளைத்தவரல்ல. கூடிய சீக்கிரமே கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகிடும் என கண்ணடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &