கொழும்பு, மோதரை எலிஹவுஸ் பிரதேசத்தில் புதிய வாய்க்கால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் நிலத்தில் புதையுண்டுள்ளனர்.
குறித்த இடத்தில் 4-5 பணியாளர்கள் சேவையில் இருந்துள்ளனர்.
மண்மேடு சரிந்து விழுந்தமையின் காரணமாக இவர்கள் புதையுண்டுள்ளனர்.
தற்போது, இவர்களை மீட்பதற்காக மண்மேட்டை அகற்றிக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஒரு சில வெளிநாட்டில் இருந்து இயங்கும் தமிழ் மற்றும் சிங்கள மொழி ஊடகங்கள் கொழும்பில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுவதாகவும் அவற்றில் உண்மை உள்ளதா எனவும் வாசகர்கள் எம்மிடம் வினவி இருந்தனர்.
இச்செய்தி தொடர்பில் நாம் பலரை தொடர்பு கொண்டு விபரம் சேகரித்ததில் நிச்சயம் இது நிலச்சரிவு மட்டுமே என்று மேலும் குறிப்பிடுகின்றோம்.