BREAKING NEWS

Sep 29, 2013

அல் கசீம் இலங்கை நலன்புரிச் சங்க இரத்த தான முகாம் [PHOTOS]

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
சவூதி அரேபியா அல் கசீம் இலங்கை  நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் நிகழ்வூ  வெள்ளிக்கிழமை (27-09-2013) கிங் சவுத் வைத்தியசாலை உணய்சா( KING SAUDH HOSPITAL, ONAIZA)இடம்பெற்றது.

அதில் சங்கத்தின் நிர்வாகத்தினர்கள் உற்பட அல்கசீமில் தொழில் புரியக்கூடிய 100 க்கும் மேற்பட்ட இலங்கை சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இஸ்லாம் அல்லாத மாற்றுமத நண்பர்களும் கலந்து கொண்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். அத்தோடு இந்திய தமிழ் நாட்டு சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர். செயலாளர் அப்துல் வதூத் குரைஸ்  அவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய உதவியவர்களுக்கும்.
நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும் சங்கத்தின் நிர்வாகம் சார்பாக நன்றியைத்தெரிவித்தார்

தகவல்
ரியாஸ் மொஹம்மத் நாபீ







Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &