BREAKING NEWS

Sep 30, 2013

யார் இந்த யேர்ன் டி சில்வா???


சிங்களத் திரையூலகில் முன்னென்றும் இல்லாதவாறு இப்போது அதிக எண்ணிக்கையான திரைப்படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன அதிலும் வணிகத் திரைப்படங்களும் சிறுவர்களுக்கான திரைப்படங்களும் நகைச்சுவைத் திரைப்படங்களுமென பல்வேறு திரைப்படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியாகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலே அதே வேகத்திலே புதுமுக நடிகர்கள் மற்றும் நடிகைகளும் திரை அவதாரம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் வெளிவரவிருக்கும் ஒரு திரைப்படம் தான் "ஜீவித்தே" எனும் சிங்கள வணிகத் திரைப்படம். இத்திரைப்படத்தை "இசுரு வீரசிங்ஹ முதலி " இயக்கியிருக்கின்றார்.

இதிலுள்ள முக்கியத்துவம் என்னவெனில் எமது சமூகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வாறான காலத்தில் எமது சமூகத்தின் அனைவரும் தத்தமது நடவடிக்கைகளை மிகவூம் கவனமாக மேற்கொள்ளவேண்டும். எமது நடத்தைகள் எந்தவிதத்திலும் சமூகத்துக்கு பங்கம் விளைவிக்காத வகையிலும் சமூகத்தை காட்டிக்கொடுக்காத வகையிலும் எவருக்கும் பாதிப்பு எற்படுத்தாத வகையிலும் சகவாழ்வூக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் அமைய வேண்டும் என நாலாப்புறத்திலிருந்தும் பயான்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒருத்தனின் சீர்கெட்ட நடத்தை ஊருக்கும் குடும்பத்துக்கும் முழு சமுதாயத்துக்கும் எப்பேர்ப்பட்ட அவப்பெயரை கொண்டு வந்து சேர்க்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏன் இந்த சினிமாக் கதை? அதற்குள் ஏன் சமூகத்தை நுழைக்கிறேன்? என்றெல்லாம் கேள்வி வருகின்றதா? நேரடியாக விடயத்துக்கு வருவோம். 

இந்த ஜீவித்தே எனும் திரைப்படத்தில் பிரதான கதாநாயகனாக நடிக்கும் யேர்ன் டி சில்வா என பெயர் மாற்றிக்கொண்டிருக்கும் பறகஹதெனியவைச் சேர்ந்த கதுருவங்க ஓய்வூபெற்ற ஆசிரியர் ராசிக் அவர்களது மகனும் மௌலவிகளான அல்ஹாஜ் அர்ஷத் மற்றும் அல்ஹாஜ் அம்ஜத் ஆகியோரின் தம்பியூமான அம்ஹரின் ஆட்டங்களின் இன்னொரு கோணம்தான் இந்த திரைப்படம்.

யேர்ன் டி சில்வா என பெயர் மாற்றினாலும் பிறப்பின் உருவத்தை மாற்ற முடியாதென்பது எம்பீஏ முடித்த அவனுக்கு தெரியாது போலும். மத்ரசாவில் படித்து இடைநடுவில் ஓடி வந்து உயர்தரம் கணிதப் பிரிவில் செய்து பேராதனைப் பல்கலைக்கழத்துக்கு பியோக விஞ்ஞானத் துறையில் பட்டப்படிப்புக்கு தெரிவாகி அங்கிருந்தும் இடைநடுவே விடடோடி வந்து சிம் செய்து நோலிமிட்டில் சேர்ந்து  வேலை செய்தவாறு MBA முடித்து காதல் சேட்டையில் ஒரு யூவதி ஏமாற்றி திருமணம் செய்து அவளையூம் இடைநடுவே விட்டோடிய இவன் இப்போது குடும்பத்துக்கு கேடு விளைவித்தது போதாதென்று சமூகத்தை நாசமாக்க சினிமாவில் இறங்கி கும்மாலமடிக்கின்றான்.

JASM இன் செயலாளரின் மைத்துனரான இவன் செய்த அட்டகாசங்களுக்கும் கூத்துக்களும் யூவதியை ஏமாற்றியதற்கும் எவ்வித நடவடிக்கையூம் எடுக்காதவர்கள் இப்போது சமூகத்தையே காட்டிக்கொடுத்து சீரலிக்கத் துணிந்திருக்கும் இவனுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?
சமூகத்தின் சீர்திருத்தத்திற்காக குரல்கொடுக்கும் அர்ஷத் அம்ஜத் சகோதரர்கள் இதற்கெதிராக எடுக்கப்போகும் நடவடிக்கைதான் என்ன?
இதற்காக ஊர் பொறுப்புதாரிகளின் ஒட்டுமொத்த நடவடிக்கை என்ன?
(RIMAS)




Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &