கொழும்பு முகத்தவாரம் எலிஹவுஸ் பார்க் பிரதேசத்தில் நீர்வழங்கல் குழாயில் சீர்திருத்தப் பணியில் ஐவர் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.