மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் போலி நாணயத்தாள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனேஸபுரம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து ஒன்பது போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களும், ஒன்பது போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பிரதான சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களையும், 60 போலி ஆயிரம் ரூபா நாணத்தாள்களையும் அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
செட்டிகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இரண்டு சந்தேகபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்