BREAKING NEWS

Sep 29, 2013

உலக இருதய தினம் இன்று

இன்றைய சூழலில் இருதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உலகில் இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 

இது 2030ல் 2 கோடியே 30 லட்சமாக உயரும் எனவும் உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கக் கூடியவை. 

இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்டெம்பர் கடைசி ஞாயிறு (செப்டெம்பர் 29) உலக இருதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

இரவுப் பணி, முறையற்ற உணவு பழக்கம், அதிக நேர பணி, குடும்பத்தில் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன. உலகில் மாரடைப்பால் இறப்பவர்களில், 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஒட்சிஜன் அளவு குறைகிறது. 

புகை பிடிப்பவர்கள், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் ஆதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய் ஏற்படலாம். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது. 

* புகை பிடிப்பதற்கு நோ சொல்லுங்கள். 
* உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் வாய்ப்பு அதிகரிக்கிறது. 
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும். 
* யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய நோயிலிருந்து பாதுகாக்கும். 
* முடிந்தளவு எஸ்கலேட்டர், லிப்ட் ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக, 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். * காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &