மூன்று மொழிகளிலும் இலத்திரனியல் NIC
Posted by
AliffAlerts
on
09:51
in
NL
|
பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஷவிந்ர பெனாண்டோ தெரிவித்தார்.
உயர் நீதிமன்றில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையை தமிழ் மொழியிலும் வெளியிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சமயத்தில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.