முறையான இட பராமரிப்பு இன்மையால் இந்த மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் நுவன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனால் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் இருந்து 13 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையான நில பாவனை குறித்து தோட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தேசிய கட்டட பரிசோதனை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.