BREAKING NEWS

Jun 22, 2013

நில்வளா கங்கையில் நீராடிய பெண் முதலைக்கு இரை!

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் கந்துவ, ரஜகல்கொட பகுதியில் நில்வளா கங்கையில் நீராடச் சென்ற பெண்ணை முதலை இழுத்துச் சென்றுள்ளது. 

நேற்று (21) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 43 வயதுடைய கமலாவதி என்ற பெண்ணே இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளார். 

கம்புறுபிட்டி பொலிஸ், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாலிம்பட பிரதேச சபை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கம்புறுபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &