BREAKING NEWS

Jun 8, 2013

காற்றின் வேகம் 80 KM/H வரை அதிகரிக்கும்

நாட்டின் உள்ளக பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த நிலைமை காணப்படும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னாரிலிருந்து கொழும்பு காலி ஊடாக பொத்துவில் வரையிலும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையிலும் உள்ள கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பு ஏற்படக்கூடிய சாத்தியமும் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &