காலி, பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலைகாரணமாகவே இந்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
அந்த படகுகளில் சென்ற மீனவர்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் அந்த இரண்டுசடலங்களும் ஹிந்தோட்டை மற்றும் பலப்பிட்டிய கரைகளில் ஒதுங்கியுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு கடலுக்கு சென்ற 20 படகுகளில் 18 படகுகள் கடும் காற்று வீசியமையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அந்த படகுகளில் இருந்த மீனவர்களில் இருவர் கரைக்கு நீந்திவந்து சம்பவத்தை விபரித்துள்ளனர். இதனையடுத்தே அவர்களை தேடும்பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.