கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த விமானத்தில் குருவியொன்று மோதியுள்ளது.
மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே குருவி மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.L.C.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
விமானத்தைத் தரையிறக்குவதற்கு தயாரானபோது சுமார் 50 மீற்றர் உயரத்தில் குருவி விமானத்தின் முற்பகுதியில் மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விமானத்தைத் திருத்துவதற்குத் தேவையான உதிரிப் பாகங்களை தருவிப்பதற்கு விமான சேவை நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.