BREAKING NEWS

May 20, 2013

HIGH LEVEL OF CHOLESTEROL ற்கான முக்கிய காரணங்கள்!!!

எல்லோருடைய உடலுக்கும் CHOLESTEROL மிக அவசியமானதாகும். ஆனால் அதுவே அதிகமானால் சில பிரச்சினைகளுக்கு காரணமாக முடிகிறது என்றும் கூற முடியும்.


ஒரு மென்மையான கொழுப்பு போன்ற பொருளான CHOLESTEROL புதிய செல்களை உருவாக்கவும் மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தி செய்வது போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளை செய்யவும் உதவுகின்றது. உடல் இரண்டு வழிகளில் CHOLESTEROLலை பெறுகிறது. அவற்றில் 80% கல்லீரலிலும் மற்றும் மற்றது உண்ணும் உணவிலிருந்தும் கிடைக்கிறது.


மேலும் உடல் முறையாக செயல்பட ஒரு விரும்பத்தகுந்த அளவு CHOLESTEROL இன்றியமையாததாக இருக்கிறது. எப்பொழுது உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறதோ, அப்பொழுது அது அடைப்பு, STROKES மற்றும் பிற இதய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.


இப்பொழுதெல்லாம், நிறைய பேர் HIGH LEVEL OF CHOLESTEROLலுடன் போராடி வருகின்றனர். இப்போது அதிக CHOLESTEROL ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் கவனமாக இருந்து, HIGH LEVEL OF CHOLESTEROL ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமற்ற உணவு:
நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்வதால், உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. இத்தகைய நிறைவுற்ற கொழுப்பானது, CHOLESTEROL அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் அதிகம் நிறைந்துள்ளன. அந்த உணவு பொருட்களாவன கொழுப்பு நிறைந்துள்ள இறைச்சிகள், வெண்ணெய், சீஸ், கேக்குகள், நெய் போன்றவைகளாகும். எனவே கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.


பரம்பரை காரணிகள்:
நோயாளியின் பரம்பரையில், அதாவது குடும்ப வரலாற்றில் யாருக்காவது HIGH LEVEL OF CHOLESTEROL இருந்தாலும், HIGH LEVEL OF CHOLESTEROL வரும். அதிலும் HIGH LEVEL OF CHOLESTEROL ரபுரிமையாக கொண்டு ஏற்பட்டால், அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற வடிவத்தில் ஏற்படுகிறது.


கூடுதல் எடையை பெற்றிருத்தல்:
உடல் பருமன் அல்லது வெறுமனே அதிக எடையை கொண்டிருத்தல், HIGH LEVEL OF CHOLESTEROL ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாகும். அது மட்டுமல்லாமல், ஒருவரின் சமூக வாழ்க்கையையும் பாதித்து, மேலும் அடைப்புகளுக்கு காரணமாக உள்ள TRIGLYCERIDEகளை அதிகரிக்க செய்கிறது. ஆகையால், HIGH LEVEL OF CHOLESTEROLலால் ஏற்படும் ஆபத்தைத் தடுப்பதற்கு, எடையை பராமரிக்க வேண்டியது அவசியம்.

சோம்பல்:
யாரொருவர் வாழ்க்கையை நாள் முழுவதும் உட்கார்ந்து அல்லது படுத்திருந்து, எந்தவொரு செயலின்றியும் பொழுது போக்குகின்றார்களோ, அவர்களுக்கு HIGH LEVEL OF CHOLESTEROL ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. சுறுசுறுப்பான செயல்பாட்டிலுள்ளவரின் வாழ்க்கை TRIGLYCERIDEகளை குறைத்து, எடையை பராமரிக்கவும் உதவுகிறது.

புகைபிடித்தல்:
சிகரெட் பிடித்தல், ஒருவருடைய கொழுப்பின் அளவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அது நல்ல CHOLESTEROLலையும், அதே போல் ஒருவரின் ஆயுட்காலத்தின் அளவையும் குறைக்கிறது. எனவே, கொழுப்பின் அளவை பராமரித்து மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ புகைப்பிடித்தலை விட்டு விட வேண்டும்.


வயது மற்றும் பாலினம்:
ஒருவர் 20 வயது நிறையும் பொழுது CHOLESTEROLலின் அளவு இயல்பாகவே அதிகரிக்க தொடங்குகிறது. கொழுப்பின் அளவு வழக்கமாக அனைத்து பாலினத்தவருக்கும், 60-65 வயது வரை அதிகரிக்கிறது. பெண்கள் பொதுவாக மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு குறைந்த CHOLESTEROL நிலையை கொண்டிருக்கின்றனர். ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின்னர், பெண்கள் ஆண்களை விட அதிக அளவு CHOLESTEROL கொண்டிருக்க முடியும். ஆகையால் முதுமை அடைகின்ற போது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையையும் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.

மருந்துகள்:
சில மருந்துகள் TRIGLYCERIDEகளின் அளவை அதிகரிக்க செய்ய முடியும். இதனால், ஒரு மாத்திரையை உட்கொள்ளுவதற்கு முன்பு, மருத்துவரின் தகுந்த ஆலோசனையைப் பெற வேண்டும்.

மதுபானம்:
தொடர்ந்து மதுபானம் அருந்தும் போது, உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து, உடலில் கொலஸ்ட்ராலின் அளவும் அதிகரிப்பதன் காரணமாக, கல்லீரல், இதய தசைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


மன அழுத்தம்:
மக்கள் மன அழுத்தத்தின் போது வழக்கமாக மது அருந்துவது அல்லது கொழுப்பு உணவு பொருட்களை உண்ணுதல், புகைப்பிடித்தல் மூலம் தங்களை ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர். ஆகையால், நீடித்த மன அழுத்தம் இரத்த CHOLESTEROL அளவை அதிகரிக்கச் செய்ய காரணமாகலாம்.

நோய்கள் :
நீரிழிவு மற்றும் தைராய்டு சுரப்பு குறைவு போன்ற சில நோய்கள் உடலில் CHOLESTEROLலின் அளவை அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க, தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


BUMS (Hons), Adv. Dip. in Couns. Psychology,
Dip. in Panchakarma & Therapeutic Massage

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &