விடியும் முன் என்ற த்ரில்லர் படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார். புதிய இயக்குநர் பாலாஜி கே மோகன் இயக்கும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் நடிக்க வருவதாக ஒப்புக் கொண்டாராம் பூஜா.
இயக்குநர் பாலாஜி குமார் ஹாலிவுட்டில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவராம். நைன் லைவ்ஸ் ஆப் மாறா என்ற படத்தையும் எடுத்துள்ளார். மாளவிகா குட்டன், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பலரும் இதில் நடிக்கின்றனர்.
இத்தனை காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தது குறித்து பூஜா கூறுகையில், "சில தனிப்பட்ட காரணங்களுக்காக அப்படி இருக்க வேண்டி வந்தது. பின்னர் நல்ல கதை கிடைத்தால் நடிக்கலாம் என்று காத்திருந்தேன்.
நான் எதிர்ப்பார்த்த மாதிரி கதையாக விடியும் முன் அமைந்தது, என்றார். இனி புதிய படங்களில் தீவிரமாக நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.