BREAKING NEWS

May 23, 2013

இந்தியில் முதல் முறையாகப் பாடிய ரஜினி!

Rajini Sings Hindi Kochadaiyaan
சூப்பர் ஸ்டார் ரஜினி தன் கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் என்பது ரொம்ப பழைய செய்தி. 

இதோ... ஒரு புதிய செய்தி. கோச்சடையானின் இந்திப் பதிப்புக்காக தன் சொந்தக் குரலில் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் ரஜினி. 

இந்தப் பாடலை இர்ஷத் கமில் என்பவர் எழுத, நேற்று பதிவு செய்தார் ரஹ்மான். பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். 

அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார். 

ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையானுக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். 

கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்போது இரண்டாவது பகுதிக்கான டப்பிங் நடக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &