BREAKING NEWS

May 23, 2013

ஆப்பிள் தரும் 13 இலட்சம் பரிசு யாருக்கு வேணும்?

apple gives ten thousand dollers
ஆப்பிள் ஓர் அரிய வாய்ப்பை தனது வாடிக்கையாளருக்கு வழங்குகிறது, இதில் நீங்கள் ஜெயித்தால் 13 இலட்சம் ரூபாய் உங்களுடையது. 

ஆம். ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களின் எண்ணிக்கை விரைவில் ஐந்தாயிரம் கோடியை தொடவிருக்கின்றது. இதனையொட்டி ஐந்தாயிரம் கோடியாவது அப்ளிகேசன்/விளையாட்டை டவுன்லோட் செய்யும் பயனாளர்களுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் பரிசாக அறிவித்துள்ளது.

மேலும் அதற்கு அடுத்து முதல் ஐம்பது அப்ளிகேசன்/விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும் பயனாளர்களுக்கு 500 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆப் ஸ்டோர் அன்பளிப்பு அட்டையை வழங்கவுள்ளது. 

இதன் மூலம் ஐபோன், ஐபேடுகளில் பணம் கட்டி வாங்கக் கூடிய அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள், படங்கள், பாட்டுக்கள், புத்தகங்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

 நீங்கள் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அல்லது ஐபோட் பயன்படுத்தி வந்தால் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள். ஆப்பர் லாம் நல்லாதான் விடறீங்க ஆனா மொபைல் விலைய கேட்ட தான் ஆப் ஆக வேண்டியிருக்கு.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &