BREAKING NEWS

Feb 25, 2013

மொரட்டுவ பொறியியல் பீடம் நாளை திறக்கப்படும்

மோதல் காரணமாக மூடப்பட்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் நாளை 26ம் திகதி செவ்வாய்க்கிழமை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழக பொறியல் பீட மாணவர்களுக்கும் தேசிய தொழிநுட்ப டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களுக்கும் இடையில் கடந்த 16ம் திகதி இரவு மோதல் ஏற்பட்டது.

இதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் பொறியியல் பீட மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றார்.

இதனையடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ள நிலையில் இரு பிரிவினரிடம் பல்கலைக்ழக நிர்வாகம் நடாத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பொறியியல் பீடம் மாத்திரம் நாளை திறக்கப்படவுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &