BREAKING NEWS

Feb 25, 2013

ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடர் இன்று (25) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பமாகின்றன.

சுவிர்ஸ்சலாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகும் ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

ஐநா மனித உரிமைப் பேரவையில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழுவிலுள்ள பலர் ஏற்கனவே ஜெனீவா சென்றுள்ளதோடு, நேற்று (24) சிலர் ஜெனீவா நோக்கி பயணமானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 21ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &