இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய ரியாத் தமிழ் தஹ்வா ஒன்றியம் உத்தேசித்துள்ளது. இதன் முதல் கட்ட நகர்வாக நாளை திங்கட்கிழமை ஒரு கூட்டத்துக்கான ஏற்பாடு தலை நகர் ரியாதில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பல்வேறு தரப்புகளையும் ஒன்றிணைத்து இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து அது சம்மந்தமான அறிக்கை ஒன்றை அரபு மொழியில் தயாரித்து மன்னர், இளவரசர்கள், தலைமை முப்தி உட்பட பல்வேறு தரப்புகளிடம் கையளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
