Apr 19, 2013
துபாய் போலீசாருக்கு அடித்த சொகுசு கார் லாட்டரி (PHOTOS)
Posted by AliffAlerts on 16:23 in NF | Comments : 0
அபுதாபி: துபாய் போலீசாருக்கு பெராரி சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்கள் ழங்கப்படவுள்ளன. உலகில் மிகவும் பணக்கார போலீஸ் துறை என்ற பெருமை துபாய் போலீசுக்கு உண்டு. இதன் காரணமாக அங்குள்ள ரோந்து போலீஸ் படைக்கு சமீபத்தில் ஒவ்வொன்றும் தலா ரூ.2.5 கோடி விலை மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு கார்கள் வழங்கப்பட்டன. இது நடைமுறைக்கு வந்த ஒரு வாரத்திலேயே மற்றொரு அதிர்ஷ்டமும் கிடைத்தது. அதாவது பெரிய பணக்கார கோடீசுவரர்கள் பயன்படுத்தும் பெராரி சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்கள் தற்போது வழங்கப்படவுள்ளன. இக்கார்கள் பச்சை மற்றும் வெள்ளை கலர்கள் கலந்து காணப்படுகின்றன.