பொறுமைக்கும் எல்லையுண்டு. இல்லாததை இருக்கு என்று பொய் கூறினால் யாருக்குத்தான் ஆத்திரம் வராமல் இருக்கும். பொய்க் குற்றத்தால் ஆவேசமும், ஆத்திரமும் அடைந்துள்ளது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை.
முஸ்லிம்களை முறையாக வழிநடத்தி வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது நாட்டையும் சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாக அமையும், எனவே முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுபல சேனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை தொடர்பு படுத்தி பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், உலமா சபை தேசிய பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.