சீனாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 600இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
சீனாவின் தென்மேற்கு, சிசுவான் மாகாணத்தில் உள்ள யா அன் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது 6.6 ரிச்டர் அளவு பதிவாகியுள்ளதாவும் 6 மைல் தொலைவில் இது உணரப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிதிவித்துள்ளது.
இதன் காரணமாக கட்டிடங்கள் பல பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர்விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தொலைபேசி இணைப்புக்களும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இப்பகுதிகளில் 2,000 இராணுவவீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யா அன் பகுதியில் 1.5 மில்லியன் மக்கள் தொகை காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இம்மாகாணத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70,000 பேர் கொல்லப்பட்டதுடன் 18,000 பேர் காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.