BREAKING NEWS

Apr 19, 2013

திருமணம் செய்து கொண்ட ஆர்யா, நயன்தாரா (PHOTOS)

ஆர்யா, நயன்தாரா இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து உள்ளதாக கோடம்பக்கமே கிசு கிசுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் புனேயில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் உண்மையில் அல்ல . ராஜா ராணி படத்தில் வரும் ஒரு முக்கிய காட்சிக்காக. அட்லீ குமார் இயக்கும் இந்தப் படத்தில் நயனும் ஆர்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் நயன்தாராவும் ஆர்யாவும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியை புனேயில் உள்ள தேவாலயத்தில் எடுக்க முடிவு செய்த இயக்குனர், அதற்காக புனே செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில் அனுமதி பெற்றார்.
இந்தியாவில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயங்களில் மிகப் பழமையானது இதுதான். ஒரு தேவாலயத்தில் நடக்கும் திருமணத்தில் என்னென்ன சடங்குகள் முறைப்படி நடக்குமோ அதில் ஒன்றுவிடாமல் இருவருக்கும் நடத்தப்பட்டது.ஆர்யா கோட் சூட் அணிந்திருந்தார். நயன்தாரா பாரம்பரிய வெள்ளை கவுன் அணிந்து வந்தார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இந்த திருமணக் காட்சி படமாக்கப்பட்டது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &