
இஸ்லாமிய மார்க்கத்தின் நடைமுறைகளில் நாம் தலையிடபோவது இல்லை
என பொதுபல சேனா அமைப்பின் திட்டமிடல் அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்து இருப்பதாக அறியபடுகின்றது.
இஸ்லாமிய மார்கத்தின் சடங்கு முறைகளில் ஒன்றான சுன்னத் செய்வது தொடர்பில் பொது பல சேனா அமைப்பு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டுமா என மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன் போது அமைப்பின் திட்டமிடல் அதிகாரி டிலந்த விதானகே இஸ்லாமிய மார்க்க விடயங்களில் தலையிடுவது எமது வேலையல்ல, அவர்கள் பகுதியாக வெட்டிக்கொண்டாலோ அல்லது முழுவதும் அறுத்துக்கொண்டாலோ அது நமக்கு தேவையில்லை, என தெரிவித்துள்ளார்.