போலி மருத்துவ சான்றிதழை தயாரித்து சவூதி அரேபியாவுக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர், மீண்டும் இலங்கை தூதரகத்திடம் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியாவை சேர்ந்த சரோஜா புஸ்பவள்ளி என்ற அவர் கடந்த வாரம் வீட்டுப்பணிப் பெண்ணாக சவூதிக்கு சென்றார்.
சவூதியில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையின் போது அவர் மூன்று மாதங்கள் கருத்தரித்திருப்பது தெரியவந்துள்ளது.
எனினும் கொழும்பில் தயாரிக்கப்பட்ட அவரது மருத்துவ அறிக்கையில் அவர் கருத்தரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் அவர் வீட்டுப் பணிகளுக்கு ஏற்புடையவர் இல்லை என்று தெரிவித்து அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு அவரது ஒப்பந்தகாரர் இலங்கை துதரகத்திடம் அவரை ஒப்படைத்துள்ளார்.
அவரை இலங்கைக்கு திருப்பு அனுப்பும் நடவடிக்கைகளை சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டு வருகிறது.