கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர், அரசம்பட்டி, மேட்டுப்புலியூர், பாரூர், செல்லம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கழுதை களுடன் சென்று பால் கேட்பவர்களுக்கு அங்கேயே கறந்து கொடுகின்றனர். ஒரு பாலாடை ரூ.50-க்கு விற்பனை செய்கின்றனர்.
இதனை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கி குடிக்கின்றனர். இதனால் ஆஸ்துமா, சளி, இருமல், சுரம், வெப்ப சூடு, மந்தம், இடுப்பு வலி, கை, கால்வலி, மூட்டு வலி, என்று அனைத்து வியாதிகள் குணம் ஆகி விடுகின்றது என்றும் பிறந்த குழுந்தைகளுக்கு ஒரு பாலாடை கழுதை பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியும், வரும் காலங்களில் குழந்தைகளுக்கு எந்த நோய்களும் அண்டாது என்று நம்பு கின்றனர். இதனால் கிராமப்புறங்களில் கழுதை பாலுக்கு மவுசு இருக்கதான் செய்கிறது. மேலும் இதுகுறித்து, விருதாசலத்தை சேர்ந்த குமார் கூறியதாவது:-
நாங்கள் 30 பேர் கொண்ட குழுவாக 40, கழுதைகளுடன் ஊர் ஊராக, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, சிங்காரபேட்டை வழியாக போச்சம்பள்ளி வந்த உள்ளோம். இங்கு இருக்கும் பொதுமக்கள் கழுதை பாலை ஆவலுடன் வாங்கி குடிப்பதினால் எந்த ஊர் தவறினாலும் நாங்கள் போச்சம்பள்ளிக்கு வர தவறுவதே இல்லை. இங்கு கழுதை பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்னும் இரண்டு நாள் தங்கி விட்டுச் செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.