நியூயார்க்: குப்பைத்தொட்டியை உதைப்பது போன்ற நடன சர்ச்சையால், சையின் புதிய பாப் ஆல்பம் ஜென்டில்மேனுக்கு தென்கொரிய தொலைக்காட்சியால் தடை செய்யப்பட்டுள்ளது தென்கொரியாவின் பாப் பாடகரான பார்க் ஜி சங், ரசிகர்களால் சாய் என்று அழைக்கப்படுபவர், கடந்த 2012ல் தான் வெளியிட்ட கங்ணம் ஸ்டைல் ஆல்பத்தால் உலகப் புகழ் அடைந்தார். இரண்டாவது ஆல்பம் வெளியிடுவதில், முதலில் தலைப்பில் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர், தற்போது, ஜென்டில்மேன் என்ற புதிய ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். கொரிய நடன பாணியும், கொரிய வழக்கு சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய ஆல்பமும் தனக்கு புகழைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருக்கின்றார்.
இந்த ஆல்பத்தில் பாடல் துவங்கும்போது, ஒரு தெருவில் உலாத்திக் கொண்டிருக்கும் சாய், அங்குள்ள போக்குவரத்து அறிவிப்பு கூம்பினை எட்டி உதைப்பது போலவும், அங்கு வரும் பெண்களை வம்பிழுத்து கிண்டல் செய்வது போல் பாடுவது போலவும் காட்சிகள் வருகின்றன.