BREAKING NEWS

Apr 22, 2013

பொலிஸ் நிலையத்தில் 23 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

பொலிஸ் நிலையத்தில் 23 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நேற்று (21) மாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதான ஜா-எல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையிலேயே இந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &