இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், தற்போதும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த புதிய அறிக்கையை அம்னஸ்டி இன்டர்நேஷனல் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடவுள்ளது.
லண்டனில் வைத்தே இந்த அறிக்கையை வெளியிட உள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், தற்போதும் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அது புதிய அறிக்கை ஒன்றை நாளை லண்டனில் வெளியிடுகிறது.
இலங்கையில் நடந்த போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்களை அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதிய அறிக்கையை வெளியிடுகிறது. அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் மாயமாவது, ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் தாக்கப்பட்டு வருவது, அந்நாட்டு நீதிபதிகளுக்கு விடுக்கப்ட்ட மிரட்டல்கள், பிபிசி நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது அதன் சேவை துண்டிக்கப்பட்டது, மகளிர் தொண்டு அமைப்பினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்த தகவல்கள் புதிய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.
Apr 29, 2013
இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து புதிய அறிக்கை நாளை
Posted by AliffAlerts on 12:34 in NL | Comments : 0