இலங்கையின் விளையாட்டு அரசியல் மயமாக்கப்பட்டுள்ளமையினால் விளையாட்டுத்துறை அடிமட்டதிட்கு இறங்கியுள்ளதாக, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை முழு உலகமும் கிரிக்கட் மூலமே முதலில் திரும்பிப்பார்த்தது. ஆனால் இன்று இலங்கையின் விளையாட்டுத் துறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதனால் விளையாட்டுத்துறை சீரழிந்துள்ளது.
கிரிக்கட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயந்த தர்மதாச கிரிக்கட்டே விளையாடியதில்லை. விளையாட்டைப் பற்றி தெரியாத ஒருவரை அரசியல் ஆதாயம் தேடி தலைவராக நியமித்துள்ளனர்.
கிரிக்கட் அரசியாலாக்கப்பட்டுள்ளமையினால் விளையாட்டின் தரம் கீழிறங்கிப்போகும் நிலையே ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.