மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவினால் நாடாளுமன்ற செயலாளர் தமிக்க திசாநாயக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்மன் கிரியெல்ல, தயாசிறி ஜயசேகர, அகில விராஜ் காரியவசம், ரஞ்சன் ரமநாயக்க, சந்திரனி பண்டார மற்றும் ஆர்.யோகராஜன் உட்பட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
மின் சக்தி அமைச்சராக பதவி வகித்த சம்பிக்க ரணவக்கவினால் நிராகரிக்கப்பட்ட இந்த முன்மொழிவை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமுல்படுத்தியுள்ளார். அத்துடன் இந்த சர்ச்சை தொடர்பாக அமைச்சர் சம்பிக்க அமைச்சர் பவித்ராவிற்கு எதிராக சவால் விடுத்துள்ளார் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் டிலான் பெரோவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை நிறைவு பெறவில்லை.
எவ்வாறாயினும், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 2ஃ3 பெரும்பான்மையினால் தோக்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Apr 29, 2013
அமைச்சர் பவித்ராவிற்கு எதிராக நம்பிக்கை யில்லா பிரேரணை
Posted by AliffAlerts on 12:36 in NL | Comments : 0