ஐபிஎல் 6வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய கொல்கத்தா அணியும் கடைசி ஓவர் வரை இழுத்துப் பிடித்து விளையாடியும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கொல்கத்தா அணி வீரர் பிஸ்லா பவுன்ட்ரிகள் மேலும் பவுன்ட்ரிகள் அடித்தார். கடவுளே இந்த பிஸ்லா சீக்கிரம் அவுட்டாகட்டும் என்று சென்னை ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் வேண்டுதல் ஆட்டம் முடியும் நேரத்தில் தான் நிறைவேறியது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி மெதுவாக பந்துவீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னை அணியின் கேப்டன் டோணிக்கு ரூ.1,085,914.75 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.