அவர்கள் திருமணத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர். டயானாவுக்கு அடுத்தபடியாக அழகான இளவரசி கேட் என்று மக்கள் கூறுகின்றனர். அவரின் உடை அலங்காரம் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
கேட் ஜூலை மாதம் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார் என்று அரண்மனை செய்திகள் தெரிவித்துள்ளன. ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு பிலிப் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.