BREAKING NEWS

Apr 29, 2013

நேட்டோ விமானம் விழுந்து நொறுங்கி 4 வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலியாயினர், 

தெற்கு ஆப்கானிஸ்தானில் பகுதியில் இந்த நேட்டோ விமானம் விழுந்து நொறுங்கியது. பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் என்ற தகவலை நேடோ படையினர் வெளியிடவில்லை. 

ஈராக்கில் 5 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்: 

இந் நிலையில் ஈராக் நாட்டில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் அதிகம் வசிக்கும் அன்பர் மாகாணத்தில் 5 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். 

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். 

இச்சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது அன்பர் மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

l

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &