கொழும்பில் சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்யும் நடவடிக்கையில் அமெரிக்காதான் அதிகமாக ஈடுபட்டது. இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியிலான உதவிகள் தடைபட்டு அதை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் கண்காணிக்கு. இலங்கையில் சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்டனர். அதேபோல் சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்க கொலை 2010 ஹெக்நேலியகொட காணாமல் போனது, 2011 ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் போன்றவை உதாரணங்களாகும். இதேபோல் இலங்கை இறுதிப் போரில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இலங்கை இன்னொரு போரை தமிழ் மக்களால் எதிர்நோக்க நேரிடும் என்றார் அவர்.