BREAKING NEWS

Apr 28, 2013

மரியானுக்காக ஏ.ஆர். ரஹ்மானுடன் கை கோர்த்த யுவன்

ஒரு இசை அமைப்பாளர் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியிருக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையில் இளையராஜாவும், இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜாவும் பாடியிருக்கின்றனர். முதன் முறையாக தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் யுவன் சங்கர்ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.

மரியான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் யுவன். அப்பா இளையராஜாவின் இசையைத் தவிர முதன் முறையாக யுவன் பாடியது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தானாம்.

யுவன் பாடிய வரிகள் தனுஷ் எழுதியதாம். ஏ.ஆர்.ரஹ்மான் - யுவன் காம்பினேசன் சூப்பர் என்று இயக்குநர் பரத் பாலா பாராட்டியுள்ளார். பாடலும் பிரமாதமாக வந்துள்ளதாம். எனவே இதனை திரிவேணி சங்கமம் என்கின்றனர் ரசிகர்கள்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &