இங்கிலாந்தின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கெவின் பீட்டர்சனின் தீவிர ரசிகையான ஹன்சிகா அவரை கட்டித் தழுவி ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.
கெவின் பிட்டர்சனின் தீவிர ரசிகையான ஹன்சிகா, கிரிக்கெட் போட்டிகளில் பிட்டர்சன் விளையாடும் போது, டி. வி. முன்பு அமர்ந்து அவர் அதுடுப்பெடுத்தாடும் போது கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டிருப்பாராம்.
அப்படிப்பட்ட ஹன்சிகா, சமீபத்தில் 'தீயா வேலை செய்யனும் குமாரு" என்ற படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றபோது எதேச்சையாக அங்குள்ள விமான நிலையத்தில் கெவினை கண்டுள்ளார்.
உடனே ஹன்சிகா, கையிலிருந்த பொருட்களை எல்லாம் அப்படியே கீழே போட்டு விட்டு, ஓடிச்சென்று கெவினைக் கட்டித்தழுவியுள்ளார்.
இதனையடுத்து, அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஹன்சிகா, சில நிமிடங்கள் அவரைப்பற்றியும் அவரது விளையாட்டுகளைப் பற்றியும் பேசிவிட்டு விடைபெற்றுள்ளார்.
அத்தோடு, அந்த பொன்னான நேரத்தில் கெவினுடன் நின்று விதவிதமான புகைப்படங்களையும் எடுத்துக்கொண்ட ஹன்சிகா, அவற்றை தனது கொலிவுட் நண்பர்களுக்கு ஈ-மெயில் மூலம் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.