
உலகலாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில்
இலங்கையிலும் தங்கத்தின் விலையில் கடும் வீழ்ச்சி எற்பட்டுள்ளது.
இன்று (18-04-2013) இலங்கையில் ஒரு பவுண் நகைத் தங்கத்தின் விலை 38,552 ரூபா 31 சதமாக விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கத்தின் பெறுமதியில் உயர்வு நிலையே தெடர்ச்சியாக இருந்து வந்தது. இந்நிலையில் இவ்வாரம் முதல் தங்கத்தின் பெறுமதி தொடர்ச்சியான சரிவை கண்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் நகைத்தங்கம் 53 ஆயிரம் ரூபா வரை ஏற்றம் கண்டமை குறிப்பிடத்தக்கது. தங்க கொள்வனவாளர்களுக்கு இது சாதகமான மகிழ்ச்சி தரக் கூடிய செய்தியாக இருப்பினும் தங்கத்தை மூலதமாகக் கொண்டவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனினும் இது ஒரு நிரந்தர வீழ்ச்சியாக, தொடர்ச்சியான ஸ்திர தன்மையில் இருக்காது என கூறப்படுகிறது.