கல்முனையில் பொதுபல சேனா
Posted by
AliffAlerts
on
17:06
in
NL
|
பொதுபல சேனா அமைப்பு கல்முனையில் காரியாலயம் ஒன்றை
அமைக்க உள்ளதாக அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளஅமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அப்பிரதேசத்தில் அலுவகமொன்றைத் திறக்குமாறு அங்கு வாழும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக விதானகே தெரிவிக்கின்றார்.
பொதுபலசேனா போன்ற அமைப்புகளுக்கு எதிராக அண்மையில் கல்முனை மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அங்கு காரியாலயமொன்றை அமைப்பது சவால்மிக்கதென அவர் சுட்டிகாட்டியுள்ளார்.