அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள வாகோ நகருக்கு அருகில் உள்ள உர தொழிற்சாலையிலேயே நேற்று புதன்கிழமை இரவு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.
இந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் கட்டிடங்களில் 2600 க்கும் அதிகமானோர் அகப்பட்டுக்கொண்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதுடன், அம்பியூலன்ஸ் வண்டிகளும் 6 ஹெலிகொப்டர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டுச் செய்திகள் கூறியுள்ளன.
பல கட்டிடங்கள் இன்னமும் தீ பிடித்து எரிந்துகொண்டிருப்பதாகவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.