சர்வதேச புத்தாக்குநர் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கமொன்றும் வெள்ளிப்பதக்கமொன்றும் கிடைத்துள்ளதாக தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு கூறியது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 42 நாடுகளைச் சேர்ந்த 600 புத்தாக்குநர்கள் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை சார்பாக 2012 இல் சிறந்த புத்தாக்குநராக பங்கேற்ற மஞ்சு குணவர்தன பங்கேற்றதோடு இவர் எரிசக்தி மற்றும் மருத்துவ பிரிவு சார்ந்த இரு போட்டிகளில் பங்கேற்றார். இவர் சமர்ப்பித்த சி.எப்.எல். (CFL) மின் குமிழுக்குப் பதிலாக நெனோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்த விசேட சி.எப்.எல். பல்பிற்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் இவர் முன்வைத்த படைப்பிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சர்வதேச விருது பெற்ற மஞ்சுவை அமைச்சர் சம்பிக ரணவக்க நேற்று அமைச்சில் வைத்து சந்தித்தார். விருது பெற்றது குறித்து அவருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் நாட்டின் அபிவிருத்திக்கு புத்தாக்குநர்களின் பங்களிப்பு பெறப்பட வேண்டும் என்றார்.