முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 62 இலட்சம் ரூபா பெறுமதியான கடிகாரம் உள்ளிட்ட இன்னும் சில பெறுமதியான பொருட்களை பொலிஸார் இரும்பு கடையிலிருந்து மீட்டுள்ளனர்.
அவருக்கு சொந்தமான கீகியனகந்த தோட்டத்திலுள்ள பங்களாவில் இருந்தே இந்த பொருட்கள் திருடப்பட்டு பழைய இரும்பு கடைகளுக்கு விற்கப்பட்டுள்ளன.
300 வருடங்கள் பழமையான மேசை கடிகாரம், ஆறரை அடி உயரமான விளக்கு உள்ளிட்ட பெறுமதியான பொருட்களே இவ்வாறு விற்கப்பட்டுள்ளன.
பங்களாவில் கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்து திருடப்பட்ட கடிகாரத்தை குறித்த நபர் பழைய இரும்பு கடைக்கு 8000 ரூபாவிற்கு விற்றுள்ளார். விளக்கு மற்றுமொரு இரும்பு கடைக்கு விற்கப்பட்டுள்ளது.
பொருட்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து பழைய இரும்பு கடை முதலாளி உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் நிதியமைச்சரான ரொனி டி மெல் பல வரவு-செலவுத்திட்டங்களை இந்த பங்களாவில் வைத்தே தயாரித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கீகியனகந்த பங்களாவின் முதல் சொந்தகாரர் ஆங்கில இனத்தை சேர்ந்தவர் என்றும் இந்த கடிகாரத்தை அவர்களே முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லுக்கு பரிசளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Apr 23, 2013
62 இலட்சம் ரூபா பெறுமதியான கடிகாரம் இரும்பு கடையில்
Posted by AliffAlerts on 09:02 in NL | Comments : 0