இறக்குமதி செய்யப்படும் 1000 சீசீ இயந்திர வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்துக்கொள்ளலாம் என்று மோட்டார் வாகன பதிவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் திணைக்கள பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் 600 சீசீ இயந்திர வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை மட்டுமே மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவு செய்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1000 சீசீ வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை ஓட்டப்பந்தையத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ஆணையாளர் அறிவித்துள்ளார்.