2012 ஆம் ஆண்டில் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் மீதான பாலியல் ல்லுறவுகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பதிவாகியுள்ள பாலியல் வல்லுறவுகள் தொடர்பிலான 1740 வழக்குகளில் 1464 வழக்குகள் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் மீதானவையே என, சட்டமா அதிபர் திணைக்கள ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களில் 89 வீதம் பெண்கள் மீதானவை. அதேவேளை 11 வீதமானவை ஆண்கள் மீதானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் மீதான குறித்த பாலியல் வல்லுறவுகளில், இவர்கள் மீதான வல்லுறவில் ஈடுபட்டவர்கள் இரத்த உறவு உறவினர்களே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த அறிக்கையில் சிறுவர்கள் மீதான வல்லுறவுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வல்லுறவு தொடர்பில் 1159 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் மிக மோசமான பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லுறவுகள் தொடர்பில் 723 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Apr 21, 2013
இளம் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் பாரிய அளவில் அதிகரிப்பு
Posted by AliffAlerts on 11:13 in NL | Comments : 0