BREAKING NEWS

Apr 24, 2013

40KG கேக் வெட்டி 40வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின்

மும்பை: மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 16வது வயதில் விளையாடத் துவங்கிய சச்சின் இன்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இப்படி இந்தியாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் பெருமை சேர்த்த அவர் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

24 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் டெண்டுல்கர் இன்றும் புதிய சாதனைகள் படைக்கும் துடிப்போடு தான் காணப்படுகிறார்.

கொல்கத்தா நைடர் ரைடர்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் ஐபிஎல் போட்டி இன்று கொல்கத்தாவில் நடப்பதால் சச்சின் அங்கு தான் பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

சச்சின் பிறந்தநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் அணி மேனேஜர் தெரிவித்தார். மீடியா முன்பு சச்சின் கேக் வெட்டி அங்கு கூடியிருப்பவர்கள் முன்பு பேசவிருக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இரவு போட்டிக்கு முன்பு கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்காள் சச்சின் பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்காக அது 40 கிலோ கேக்கிற்கு ஆர்டர் கொடுத்துள்ளது. கேக்கில் சச்சினின் 40 வகையான முகபாவனைகள் வரையப்பட்டிருக்குமாம். இந்த சாக்லேட் கேக்கை செய்ய கானா மற்றும் மடகாஸ்கரில் இருந்து கொக்கோ வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த கேக்கை சச்சின் வெட்டுகிறார்.

இன்றைய போட்டியின்போது ஈடன் கார்டனில் ரசிகர் ஒருவர் சச்சினுக்கு 5 அடி 6 அங்குள உயரத்தில் அதாவது லிட்டில் மாஸ்டரின் உயரத்திற்கு இனிப்பாலான BATடை பரிசளிக்கிறார்.





Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &