வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுகள் வெடித்தது என்றும், இதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காயம் அடைந்துள்ளார் என்றும் HACK செய்யப்பட்ட அசோசியேடெட் பிரஸ்ஸின் (ASSOCIATED PRESS) டுவிட்டர் கணக்கில் இருந்து பொய் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
யாரோ விஷமிகள் அசோசியேடெட் பிரஸ்ஸின் டுவிட்டர் கணக்கை HACK செய்துள்ளனர். அந்த கணக்கு மூலம் வெள்ளை மாளிகையில் 2 குண்டுகள் வெடித்துள்ளது என்றும், அதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காயம் அடைந்துள்ளார் என்றும் பொய் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதை பலரும் உண்மை என்று நினைத்துவிட்டனர். இந்நிலையில் ஒபாமா நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜே கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தான் அந்த பொய்யான டுவீட்: "முக்கிய செய்தி: வெள்ளை மாளிகையில் 2 குண்டுகள் வெடித்தன. பாரக் ஒபாமா காயம்." இதைப் பார்த்த உடனே அசோசியேடெட் பிரஸ் தனது டுவிட்டர் கணக்கு HACK செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.
English summary US President Barack Obama is fine, a presidential spokesman said today after a hacked AP Twitter account sent out fake news about two bomb blasts at the White House and that the President was injured.
Apr 24, 2013
குண்டு வெடிப்பு, ஒபாமா காயம்: HACKED டுவிட்டர் செய்தி
Posted by AliffAlerts on 13:00 in NF | Comments : 0