சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணான ரிசானா நாபீக் விடுதலை செய்யப்படக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜம்ஸாட் ரிசானா குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ரிசானாவிற் பொது மன்னிப்பு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிய கடிதம் குறித்து குறித்து சவுதி அரேபிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தூதுவர் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த சிசுவின் குடும்பத்தாருடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்குமாறு ரியாத் ஆளுனரிடம், சவுதி மன்னர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிசு படுகொலை குற்றம் குறித்து 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இலங்கை பணிப் பெண் ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி சவுதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.