மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
அத்துடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களில் பரந்தளவில் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் பொலிஸ் அதிகாரங்களில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவைத்தொடர்பிலான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் இவ்வருடம் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளது.
அதுமட்டுமன்றி சட்டமூலம் ஒன்று ஒன்பது மாகாணசபைகளிலும் நிறைவேற்றப்படவேண்டும் என்ற சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
Jan 2, 2013
வடமேல் மாகாண சபை தேர்தல் ஏப்ரல் மாதம்
Posted by AliffAlerts on 21:47 in செய்தி உள்ளூர் | Comments : 0