‘நாங்கள் மீள்வோம் என்று தெரியும், அவர்கள் என்னை சாலையில் வீசும் போது வலியையும் மீறி நான் கூறிய வார்த்தைகள், ‘உன்னை தனியாக துன்புறவிடமாட்டேன் என்பது தான். சாலையில் தூக்கி வீசப்பட்ட போது தோழியின் அலறல் என்னை கொன்றே விட்டது” டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்ட போது உடன் இருந்த நண்பர் இவ்வாறு உருக்கமாக கூறியுள்ளார்.
நான் அந்த நிகழ்வின் முக்கிய சாட்சி. அந்த அசாதாரண சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பனாக அந்த இடத்தில் சமூகத்தை நினைத்து தலைகுனிய வைத்தது அந்த மோசமான இரவு. நான் இப்போது அந்த சம்பவத்தை மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை. எனினும் தொடர்பான சாட்சியத்தை என் மனசாட்சிக்கு உட்பட்டு காவல்துறையிடம் அளித்துவிட்டேன்.
அசம்பாவிதத்தில் கடுமையாக தாக்கப்பட்ட நான் தற்போது உடல் தேறியுள்ளேன். காயங்கள் பலம் என்பதால் அதிலிருந்து விடுபட சில நாட்கள் ஆகும். ஆனால் என் தோழிக்கு ஏற்பட்ட பாதிப்புகள், கோரங்கள் என்றும் மாறாது, அழியாது.
என் தோழி குறித்து என்னால் எதுவும் பேசவோ கருத்து தெரிவிக்கவோ முடியவே இல்லை. அதை நினைத்தாலே அதிர்ச்சியாகவும், நம்பவே முடியாத அளவிலும் உள்ளது.
மருத்துவமனையில் என் தோழியை பார்க்க இரண்டு முறை சென்றேன். முதல் முறை அவர் சோர்ந்து இருந்தார். இரண்டாவது முறை சென்றபோது, கண் விழித்து என்னை பார்த்தார். அவர் பேசியது, ” காம வெறியர்களை பிடித்துவிட்டார்களா” நான் தலை அசைத்ததும், இதிலிருந்து மீள போராட போகிறேன் என்றார்.
அவர் போராடுவேன் என்று கூறியது குற்றவாளிகளை தண்டித்து வெற்றியடைவேன் என்பது தான். தலைமறைவா௦ன முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை கேட்டு அவர் மிகவும் பலமுடன் காணப்பட்டார்.
ஆனால் அந்த ஆறு பேரில் ஒருவர் ஒரு மைனர் என்பதால் அவருக்கு முழுமையான தண்டனை கிடைக்காதோ என்று பயந்துவிட்டதாக கூறினார். ஆனால் மைனர் என்றாலும் குற்றத்திற்கான தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்றார்.
மேலும் அவரிடம், நீங்கள் மட்டும் ஆறு பேருடன் சண்டையிட்டு பின்னர் தாக்கி வெளியே வீசப்பட்டு சாலையில் மற்றவர் உதவியை நாடியிருந்த வேளையில், உங்கள் மனதில் என்ன இருந்தது? என்று கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்,
நாங்கள் மீள்வோம் என்று தெரியும், அவர்கள் என்னை சாலையில் வீசும் போது வலியையும் மீறி நான் கூறிய வார்த்தைகள், ‘உன்னை தனியாக துன்புறவிடமாட்டேன் என்பது தான். சாலையில் தூக்கி வீசப்பட்ட போது தோழியின் அலறல் என்னை கொன்றே விட்டது.
ஆனால் சாலையில் விழுந்தபோது யாரும் உதவ முன்வரவில்லை. அங்கு யாரும் முதலில் இல்லை, நிர்க்கதியில் இருந்தோம். அது தான் உண்மை.
சமுதாயத்திற்கு ஒன்று கூற வேண்டும், எல்லோரும் இந்த விஷயத்தில் நிலைமையை எதிர்நோக்கும் போது மக்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். நாம் போராட வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் அமைதியுடன் போராட முடியாது. அமைதியுடன் போராடுவது இயலாது. இது போன்ற விஷயங்களை மக்கள் எதிர் நோக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த மாணவியின் நண்பர் உருக்கமாக கூறியுள்ளார்.
Jan 2, 2013
நடந்தது என்ன? விவரிக்கும் மாணவியின் நண்பர்!
Posted by AliffAlerts on 12:40 in NF | Comments : 0